இலங்கையில் நடைபெற்ற 15ஆவது உலக இளைஞர் மகாநாடு

15ஆவது உலக இளைஞர் மகாநாடு 2014ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் நடைபெற்றது. '2015ஆம் ஆண்டுக்குப் பிந்திய
அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் இளைஞர்களைப் பிரதான நீரோட்டத்துக்குக் கொண்டுவருதல்" என்னும் கருப்பொருளைக் கொண்ட இந்த
மாநாடு உலகம் முழுவதிலும் இருந்து 1இ500இற்கும் மேற்பட்ட பங்குபற்றுனர்களைக் கவர்ந்தது. பங்குபற்றுனர்களில் அரைவாசிப்பேர் 18 -
29 வயதுக்குட்பட்ட இளைஞர்களாவர். அவர்களில் ஒதுக்கப்பட்ட பின்புலத்தைக் கொண்ட 300 இளைஞர்களும் அடங்கியிருந்தனர்.
இந்த மகாநாட்டின் குறிக்கோள் புத்தாயிர அபிவிருத்தி இலக்குகளை மீளாய்வதில் இளைஞர்களின் பங்குபற்றுதலை மேம்படுத்துவதும்
அவர்களின் அனுபவங்களையூம் புத்தாக்க கருத்துகளையூம் பகிர்ந்துகொள்வதன் மூலம் 2015ஆம் ஆண்டுக்குப் பிந்திய அபிவிருத்தி
நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதற்கு உதவூவதும் ஆகும்.
இந்த மகாநாட்டின் நிறைவூ 14 விடயங்கள் மீது விதப்புரைகளைச் சமர்ப்பித்த 'இளைஞர்கள் பற்றிய கொழும்புப் பிரகடனத்துக்கு"
வழிவகுத்தது. அது இளைஞர் தலைமைத்துவத்துடனான அபிவிருத்திஇ வறுமை ஒழிப்புஇ தரமான கல்வியைப் பெறுவதற்கு சமத்துவமான
வாய்ப்புஇ முழுமையான தொழில் வாய்ப்பு மற்றும் தொழில்முயற்சிஇ பால்நிலை சமத்துவம்இ முறைமையான சமத்துவமின்மையை முடிவூறுத்தல்இ
இளைஞர் உரிமைகள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய பஙூ ;கேற்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்துஇ இளைஞர்கள் பற்றிய கொழும்புப் பிரகடனத்தினால் முன்வைக்கப்பட்ட விதப்புரைகளின் நடைமுறைப்படுத்தலை
மேம்படுத்துவதற்கு ஏனைய பங்கீடுபாடு உடையவர்களுடன் பங்காளியாக இணைந்து செயற்படுமாறு பங்குபற்றுனர்கள் எல்லோரும்
கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இளைஞர்கள் பற்றிய கொழும்புப் பிரகடனத்தின் ஒரு பகுதியாகஇ 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் அமைப்பின்
பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'இளைஞர் திறன்கள் தினம்" ஒன்றை இலங்கை பிரேரித்தது.

Activities

tamil title

வணக்கம்