வெளியுறவு செய்தி அமைச்சர்

மங்கள சமரவீர

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்

ஐக்கிய நாடுகளுடனான எமது 60 வருடகாலப் பயணத்தில் ஐக்கிய நாடுகள் முறைமைக்கு இலங்கை பல வழிகளிலும்
பங்களிப்புச் செய்துள்ளது. ஐ.நா. அமைப்பில் பல இலங்கையர்கள் உதவிச் செயலாளர் நாயகம் போன்ற சில முக்கிய
தொழில்சார் உயர் பதவிகளை வகித்துள்ளனர். இலங்கை ஐ.நா.வில் உறுப்புரிமை பெற்று வெறுமனே 5 வருடங்களில் 1955
இல் அப்போதைய சிலோன் ஐ.நா.பாதுகாப்புச் சபையில் முக்கிய பங்கை வகித்துள்ளது. பொதுச் சபை தலைமைப் பதவி
மற்றும் பல சர்வதேச மாநாடுகளில் தலைமை தாங்குவதனூடாக ஐ.நா.வின் ஒழுங்குவிதிகளை ஒழுங்கமைக்கும் இலங்கையின்
பங்களிப்பு மிக முக்கியமானதாகும். ஐ.நா. அதன் 70 ஆவது வருடப் பூர்த்தியை கொண்டாடும் இந்த வரலாற்று முக்கியத்துமிக்க
காலப்பகுதியில்இ சமாதானம்இ ஒருமைப்பாடுஇ சமத்துவம் மற்றும் நிலைத்திருக்கும் அபிவிருத்தியை அடைவதை நோக்கிய எமது
சொந்தப் பயணத்தில் நாம் ஐ.நா. சாசனத்தின் தத்துவங்கள்இ கருத்துக்கள் மற்றும் வளமிக்க பெறுமானங்களிலிருந்தும் நாம்
உந்தப்படுகின்றௌம்.
எமது நாட்டு மக்களின் நன்மைக்காக ஐ.நா. தொகுதியூடனான எமது நெருங்கிய உறவைத் தொடர நாம் எதிர்பார்க்கின்றௌம்.