ஜனாதிபதியின் செய்திக்குக்

மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி

2015 இந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டு 70 ஆம் வருடத்தைக் கொண்டாடுவதில் சர்வதேச சமூகத்துடன் இலங்கையூம் இணைகின்றது.
இலங்கை மக்களுக்கு இந் நிகழ்வூ விசேடத்துவமிக்க ஒரு முக்கிய நிகழ்வாகும். 2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எமது
நாட்டுக்கு நீண்டகாலமாக வழிகாட்டிய ஜனநாயக மூலதத்துவங்களை மீண்டும் உறுதிசெய்தவர்களாக எமது பங்கேற்பையூம் ஐக்கிய நாடுகள்
சாசனம் மீதான எமது அர்ப்பணிப்பையூம் மீள் உறுதிசெய்வதன் மூலம் இலங்கையானது ஐக்கிய நாடுகளில் அதன் உறுப்புரிமையின் 60 ஆவது
ஆண்டில் தடம்பதிக்கின்றது.
எமது 60 வருட காலப் பயணத்தில்இ ஒழுங்கு முறைமையை வரையறைசெய்யூம் செயன்முறைஇ சமாதானம் பேணல் மற்றும் அபிவிருத்திப் பணிகள்
உள்ளடங்கலாக பல இலங்கையர்கள் ஐக்கிய நாடுகள் பணிகளுக்கும்இ அதன் முகவரங்களுக்கும் பங்களிப்புச் செய்துள்ளனர்.
இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க கால கட்டத்தில் எமது மக்களின் நன்மைக்காக ஐக்கிய நாடுகளுடனான பணியைத் தொடர இலங்கை
அர்ப்பணிப்புடன் செயற்படும் என நான் உறுதியளிக்கின்றேன்.