SRI LANKANS

அன்ட்ரூ ஜேம்ஸ்

ஜோசப்

அன்ட்ரூ ஜேம்ஸ் ஜோசப் அவர்கள் 1958 இல் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்து 1990 இல் தனது பணி ஓய்வூ வரை பணிபுரிந்தார். மூன்று நாடுகளில் உலக சுகாதார அமைப்பின் வதிவிட பிரதிநிதியாக இருந்ததுடன் 1989 இல் உதவிச் செயலாளர் நாயகம் மற்றும் ருNனுP இன் இணை நிர்வாகி போன்ற பல உயர் பதவிகளை ஐக்கிய நாடுகள் சபையில் வகித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் நான்கு தசாப்த கால பணியில் பங்கேற்ற திரு. ஜோசப் அவர்கள் 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலமானார். முன்னால் செயலாளர் நாயகம் கொபி அனான் அவர்களின் அனுதாபச் செய்தியில் பல சர்வதேச அமைப்புக்கள் காபுல் நகரிலிருந்து வெளியேறிய வேளை திரு. ஜோசப் அவர்கள் எவ்வாறு அங்கு தங்கியிருந்து பணிபுரிந்தார் என்பது அவரது தைரியத்தையூம்இ அவரது அரசியல் நோக்கையூம் வெளிக்காட்டுவதாக அவரது சகாக்கள் நினைவூ கூர்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

சேர் கிளவ்டி ஸ்டான்லி

கொரயா

ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கைப் பிரதிநிதியாக 1946 இல் சேர் கிளவ்டி ஸ்டான்லி கொரயா அவர்கள் இராஜதந்திர பணியில் இணைந்தார். பின்னர் 1948 இல் ஐக்கிய அமெரிக்காவூக்கான முதலாவது தூதுவராக கடமையேற்றார். உள்நாட்டலுவல்கள் அமைச்சராகவூம்இ வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவூம் இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராகவூம் (1932இ 1939 மற்றும் 1941) கௌரவமிக்க அரசியலில் பணிபுரிந்துஇ அதற்கப்பால் சேர் கொரயா அவர்கள் 1955 இல் ஐக்கிய நாடுகள் சபையின் வரிகள் மற்றும் வர்த்தகம் மீதான பொது ஒப்பந்தத்தின் சர்வதேச பண்டங்கள் ஒழுங்கப்மைப்பு தொடர்பான 10 ஆவது அமர்வின் இடைக்கால குழுவின் தவிசாளராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1958 இல் இவர் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 1960 மே மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் இலங்கையிலிருந்தான முதலாவது தலைவராகப் பணிபுரிந்துள்ளார்.

இராஜேந்திர

குமாரசுவாமி

இராஜேந்திர குமாரசுவாமி அவர்கள் ருNனுP இன் உதவி நிருவாகியாகவூம்இ 1961 இல் ருNனுP இன் ஆசிய பசுபிக் பிராந்தியப் பணியகத்தின் பணிப்பாளராகவூம் பணியாற்றியூள்ளார். 1977 இல் ஐக்கிய நாடுகள் சபையின் சேவையிலிருந்து ஓய்வூபெறும் வரை உலகின் குறைந்த அபிவிருத்தியடைந்த பிரதேசங்களின் வறிய மக்களின் நிலைமையை மேம்படுத்த பணியகத்தின் செயற்பாடுகளுக்கு வழிகாட்டியூள்ளார். இவர் இருதரப்பு முறைமையிலிருந்து பல்தரப்பு உதவி முறைமையின் முன்னோடியாக இருந்துள்ளதுடன்இ மானிட அபிவிருத்திக்கான மூலோபாய மாற்றத்துக்கான அடித்தளமிட்டவராவார். இது பின்னர் அமர்த்யா சென் மற்றும் மஃபூப் அல் ஹக் அவர்களின் கீழ் ஐக்கிய நாடுகள் சபையின் தலையாய பணியாக மாற்றமடைந்தது.

கலாநிதி நெவில்

கனகரட்ன

ஐக்கிய நாடுகள் சபையின் நம்பிக்கையாளர் சபை உப தலைவர் மற்றும் ஐக்கிய நாடுகள் செயலகத்தின் சட்ட ஆலோசகர் உட்பட ஐக்கிய நாடுகள் சபையில் பல பதவிகளை கலாநிதி நெவில் கனகரட்ன வகித்துள்ளார். 1961 இல் அப்போதைய செயலாளர் நாயகம் கலாநிதி டக் ஹம்மார்ஸ்க்ஜோல்ட் உடன் கலாநிதி கனகரட்ன அவர்கள் யூத்த நிறுத்த உடன்படிக்கைகளை கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளவிருந்தார். இங்கு பிரெஞ்சு மொழியில் தேர்ச்சி வேண்டப்பட்டதால் ஒரு பிரான்ஸ் சட்ட ஆலோசகாpன் உதவி இங்கு தேவைப்பட்டது. இதனால் இப் பணிக்கான விமானப் பயணத்தில் கலாநிதி கனகரட்ன அவர்கள் பங்கேற்க முடியாது போனதுஇ துரதிஷ்டவசமாக அந்த விமானம் கொங்கோவில் விபத்துக்கு உட்பட்டதால் கலாநிதி டக் ஹம்மார்ஸ்க்ஜோலட் உடனான குழுவினர் மரணமடைந்தனர்.

கலாநிதி நந்தசிறி

ஜசென்துலியன

வெளி விண்வெளி விடயங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பணிப்பாளராகவூம்இ வியன்னாவில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பிரதிப் பணிப்பாளராகவூம் கலாநிதி நந்தசிறி ஜசென்துலியன அவர்கள் பணியாற்றியூள்ளார். வெளி விண்வெளியை அமைதியாகப் பிரயோகிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகளின் பேரவையின் (ருNஐளுPயூஊநு ஐஐ) நிறைவேற்றுச் செயலாளராக அவர் 1982 இல் இருந்துள்ளார். கலாநிதி ஜசுன்துலியன அவர்கள் அவரது ஓய்வூ காலத்தின் பின்னரும் ருNஐளுPயூஊநு ஐஐஐ ஒழுங்கமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

ஹமில்டன் சேர்லி

அமரசிங்க

ஹமில்டன் சேர்லி அமரசிங்க அவர்கள் 1967-1980 வரை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக பணிபுரிந்ததுடன் 1976 இல் அவர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் முதலாவது இலங்கைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அத்துடன்இ சமுத்திரங்கள் பற்றிய விரிவானதொரு வரைவைத் தயாரித்த கடல் சட்டங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றாவது மாநாட்டின் தலைவராகவூம் பணியாற்றியூள்ளார். 1967-1970 வரை கடல் தளம் மற்றும் சமுத்திர தரையை அமைதியாகப் பயன்படுத்துவதை அறிவதற்கான நிலையற்ற குழுவின் தவிசாளராகவூம்இ 1970-1973 காலப்பகுதியில் தேசிய எல்லைக் கட்டமைப்புக்கு அப்பால் கடல் படுக்கை மற்றும் சமுத்திர தரையை அமைதியாகப் பயன்படுத்துவது பற்றிய நிரந்தரக் குழுவின் தவிசாளராகவூம் பணியாற்றியூள்ளாh;.

லக்~;மன்

கதிர்காமர

1974 முதல் 1976ஆம் ஆண்டு வரை ஐடுழு நிறுவனத்தின் ஆலோசகராக பணிபுரிந்த திரு. லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் ஓர் புகழ்பெற்ற இராஜதந்திரியூம் மனிதாபிமானியூம் ஆவார். அறிவூசார் சொத்துரிமை சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர் 1983ஆம் ஆண்டு உலக அறிவூசார் சொத்து நிறுவனத்தின் (றுஐPழு) ஆசிய பசுபிக் பணியகத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இலங்கை அறிவூசார் சொத்துச்சட்டத்தை திருத்தியமைப்பதில் திரு. கதிர்காமர் அவர்கள் முக்கிய பங்களித்தார். சட்டத்தரணியான திரு.கதிர்கமர் அவர்கள் 1994 - 2001ஆம் ஆண்டுவரையூம் பின்னர் 2004-2005ஆம் ஆண்டுவரையூம் இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

கலாநிதி காமினி

கொரயா

கலாநிதி காமினி கொரயா அவர்கள் 1974 ஆம் ஆண்டில் அப்போதைய செயலாளர் நாயகம் குரத் வோல்டெய்ம் அவர்களால் ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார். அத்தோடு வியாபாரம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் பேரவையின் செயலாளர் நாயகமாகவூம் நியமிக்கப்பட்டார். கலாநிதி காமினி கொரயா இப்பதவிகளில் மூன்று முறை நியமனம் பெற்று 1984 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். அபிவிருத்தித் திட்டமிடல் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுஇ பிரிட்டிஷ் ஹொன்டுராஸஷுக்கான ஐக்கிய நாடுகளின் திட்டமிடல் செயற்குழுஇ மனித சூழல் பற்றிய ஐக்கிய நாடுகள் பேரவை உள்ளடங்களாக பல உயர்மட்ட குழுக்கள் மற்றும் பணிகளில் ஐக்கிய நாடுகளின் உயர் மட்டப் பதவிகளை கலாநிதி கொரயா அவர்கள் வகித்து சேவை செய்துள்ளாh;.

நீதிபதி ஊ. பு

வீரமந்திரி

நீதிபதி ஊ. பு. வீரமந்திரி அவர்கள் 1991-2000 வரை சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதியாகவூம்இ 1997-2000 வரை உலக நீதிமன்றத்தின் உப தலைவராகவூம் நியமிக்கப்பட்டார். தனது தீர்ப்புக்கள் மற்றும் சர்வதேச ஆக்கங்கள் ஊடாக சர்வதேச சட்டத்துறை அபிவிருத்திக்கு இவர் பாரிய பங்களிப்புச் செய்துள்ளார். அவரது தீர்ப்புக்களில் அணு ஆயதங்களின் சட்டபூர்வ நிலைமை (1996)இ சர்வதேச சட்டத்தின் கீழான சமத்துவம் (1997)இ இலங்கையின் புராதன நீர்ப்பாசன முறைமையை அடிப்படையாகக் கொண்ட நிலைத்திருக்கும் அபிவிருத்தி தொடர்பான முதன்மையான தீர்ப்பு (1997) உட்பட பல தீர்ப்புக்கள் குறிப்பிடத்தகன. சர்வதேச நீதிமன்றத்தில் பணிபுரிய முன்னாள் நீதிபதி ஊ. பு. வீரமந்திரி அவர்கள் ஒரு சட்டத்தரணியாகவூம் (1948)இ பின்னர் உச்ச நீதிமனற நீதிபதியாகவம் (1967-1972) கடமையாற்றியூள்ளார். இவர் ருNநுளுஊழு வின் சமாதானக் கல்விக்கான (2006) விருது பெற்ற இவர்இ வாழ்வாதார உரிமை விருது (2007)இ மற்றும் உலகின் பல பகுதியிலும் முன்னணிப் பல்கலைக்கழகங்களினால் பல கலாநிதிப் பட்டங்களையூம் பெற்றுள்ளார்.

கலாநிதி ஜயந்த

தனபால

கலாநிதி ஜயந்த தனபால அவர்கள் சமாதான செயற்பாட்டாளா;இ ஆயூதக்களைவூ நிபுணர் மற்றும் ஏற்றத்தாழ்வூகள் அற்ற உலக விழுமியங்களுக்கு உதவூதல் எனும் உயர் மட்ட தொழில் நிலைகளில் தேசிய மற்றும் சர்வதேச இராஜதந்திரியாகப் பணியாற்றியூள்ளார். புத்தாயிர அபிவிருத்தி இலக்குகளை அடைதல் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொதுவான அக்கறைகள் என்பன கலாநிதி தனபால அவர்களின் விருப்பத்திற்குரிய விடயங்களாகும். 1997 இல் ஐக்கிய நாடுகள் சபையின் மறுசீரமைப்புப் பணிகளின் பின்னர் ஆயூதம் களையூம் திணைக்களத்தை மீள் நிறுவூம் சவால்மிக்க பணிக்கு இவரை ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனான் தெரிவூ செய்தார். 1995 இல் வாக்களிப்பின்றி நிறைவேற்றப்பட்ட அணு கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை மீள்மதிப்பிட்டு விரிவாக்கும் பணியின் தலைமை வகித்த பெருமை கலாநிதி தனபாலவை சாரும்.

பேராசிரியர் சாவித்திரி

குணசேகர

பேராசிரியர் சாவித்திரி குணசேகர அவா;கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் உப வேந்தராக இருந்தார். சிறுவர் உரிமைகள்இ பெண்கள் உரிமைகள்இ மனித உரிமை சட்டமும் அபிவிருத்தியூம் மற்றும் சட்டக் கல்வி எனும் பல துறைகளில் பேராசிரியர் குணசேகர ஆய்வூப் பங்களிப்புக்களைச் செய்துள்ளார். பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான ஏற்றத்தாழ்வூகளையூம் ஒழிப்பதற்கான சாசனக் குழுவில் (ஊநுனுயூறு) 1999 தொடக்கம் 2002 வரை இவர் பணியாற்றியூள்ளார். மிக அண்மையில்இ இவர் மனித உரிமைகள் பேரவையின் 18 ஆவது அமர்வில் பால்நிலை ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினராகப் பணிபுரிந்துள்ளார். 2005 முதல் 2011 வரை இவர் ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கான நம்பிக்கை நிதியத்தின் ஒரு அங்கத்தவராகப் பணிபுரிந்துள்ளார்.

பிரசாத்

காரியவசம

இராஜதந்திரியான பிரசாத் காரியவசம் 1981 இல் வெளிநாட்டு சேவையில் இணைந்தார். 2005 இவர் ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபையில் அவரின் பதவிக்காலத்தில் இந்து சமுத்திரம் பற்றிய நிலையற்ற குழுஇ பயங்கரவாதம் பற்றிய தற்காலிக குழுஇ குழுக்களுக்கிடையிலான மூன்றாவது கூட்டம்இ மற்றும் மனித உரிமைகள் ஒப்பந்த அமைப்புத் தலைவர்களின் 16 ஆவது கூட்டம் எனும் முக்கிய அமர்வூகளில் தலைமை தாங்கியூள்ளார். 2003 இல் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய குழுவின் (ஊஆறு) முதலாவது தவிசாளராக தெரிவூசெய்யப்பட்டார். ஊஆறுஇல் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டு 2017 வரை பணியாற்றவூள்ளார். தற்போது இவர் அமெரிக்காவூக்கான தூதுவராக பணியாற்றுகிறார்.

கலாநிதி ராதிகா

குமாரசுவாமி

பயிற்சி ரீதியாக ஒரு சட்டத்தரணியான கலாநிதி ராதிகா குமாரசுவாமி அவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளராகவூம் சர்வதேச மனித உரிமைகள் துறையில் நன்கு அறியப்பட்டவருமாவார். பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பான விசேட பிரதிநிதியாக 1994 தொடக்கம் 2003 வரையான காலப்பகுதியில் பல முக்கிய பணிகளை இவர் செய்துள்ளார். 2006 ஏப்ரல் மாதத்தில் இவர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கொபி அனான் அவர்களால் சிறுவர்கள் மற்றும் ஆயூதப் போராட்டங்கள் பற்றிய விசேட பிரதிநிதியின் உதவிச் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார். 2012 வரை அதே பதவியில் பணியாற்றிய அவரை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் 2007 பெப்ரவரி மாதத்தில் மீண்டும் நியமித்தார். அவரது ஆளுகைக்குள் அவர் யூத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு பற்றி விழிப்படையச் செய்தல் மற்றும் குறித்த பிரச்சினையை முதன்மைப்படுத்துமுகமாக ஒழுங்குமுறையில் சுயாதீனமாகக் குரல்கொடுத்தார்.

பேராசிரியர் மொஹான்

முனசிங்க

பேராசிரியர் மொஹான் முனசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவில் (ஐPஊஊ)இ 1998 இல் அதன் ஆரம்பத்திலிருந்து பங்கேற்று வருகின்றார். மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வூ மற்றும் அறிவை ஊக்குவித்தமைக்காக முன்னாள் அமெரிக்க உப ஜனாதிபதி அல்கோறுடன் 2007 ஆம் ஆண்டு நோபல் பரிசை பகிர்ந்து கொண்ட வேளை இவர் ஐPஊஊ இன் உப தலைவராக இருந்தார். 40 வருட கௌரவமிக்க சேவையில் பல ஐக்கிய நாடுகள் சபையின் முகவரங்களின் நிபுணத்துவ ஆலோசகராக இருந்துள்ளதுடன்இ இன்றும் அந்தப்பணி தொடர்கின்றது.

கலாநிதி ரொஹான்

பெரேரா

கலாநிதி ரொஹான் பெரேரா அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியூ+யோர்க்கில் தற்போது பணிபுரிகிறார். தனது 30 வருட சேவைக் காலத்தில் கலாநிதி பெரேரா அவர்கள் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் முதலீடுஇ கரையோர எல்லை ஆளுகைஇ பரஸ்பர சட்ட உதவி எனும் விடயப்பரப்பில் அரசாங்கம் சார்பாக வெளி விவகார அமைச்சின் சட்ட ஆலோசகராகப் பணியாற்றியூள்ளார். இவர் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பான தற்காலிகக் குழுவில் தலைமை வகித்து வருகின்றார். இவர் 2007 தொடக்கம் 2011 வரையான காலப்பகுதியில் சர்வதேச சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினராகவூம் பணிபுரிந்துள்ளார்.

கன்னி

விக்னராஜா

கன்னி விக்னராஜா அம்மையார் அவர்கள் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நடவடிக்கை இணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளராகப் பணிபுரிகின்றார். முன்னர் இவர் அபிவிருத்திக் கொள்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டப் பணியகத்தின் கொள்வனவூ அபிவிருத்திக் குழுப் பணிப்பாளராகவூம் பணியாற்றியூள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் அதன் தலைமையகம் மற்றும் வேறு நாடுகளில் 15 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றியூள்ளார். இவர் வியட்னாம் மற்றும் இந்தோனேசியாவில் பிரதி வதிவிடப் பிரதிநிதியாகவூம்இ ஸாம்பியாவின் வதிவிடப் பிரதிநிதியாகவூம்இ நியூ+யோர்கின் ஆசியப் பசுபிக் பணியகத்தின் பிராந்திய நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதானியாகவூம் பணியாற்றியூள்ளார். வியட்னாம் அபிவிருத்தி மற்றும் சட்ட சீர்திருத்தம் தொடர்பான பங்களிப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் விக்னராஜா அம்மையார் அவர்களுக்கு மதிப்பளிக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது.

வைத்தியர் ஹிரந்தி

விஜேமான்ன

சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபைக் குழுவின் 09 உறுப்பினர்களில் ஒருவராக வைத்தியர் ஹிரந்தி விஜேமான்ன அவர்கள் தெரிவூசெய்யப்பட்டார். ஒரு மருத்துவரான விஜேமான்ன அவர்கள் இலங்கையின் சமாதான செயலகம் மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்திலும் பணிபுரிந்துள்ளார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைத் தவிசாளராகவூம்இ சுகாதாரம்இ போசாக்குஇ சிறுவர் அபிவிருத்தி ஆரம்பக் கல்விஇ சிறுவர் பாதுகாப்பு மற்றும் யூத்தம் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய ருNஐஊநுகு இன் தேசிய துறைசார் நிபுணராகவூம் இவர் பணியாற்றியூள்ளார். ஐடுழு மற்றும் ருNகுPயூ யின் ஆலோசகராகவூம் இவர் செயற்பட்டுள்ளார். வைத்தியர் ஹிரந்தி விஜேமான்ன அவர்கள் சிறுவர் உரிமை மற்றும் பெண்கள் உரிமைகள் விடயத்தில் நான்கு தசாப்தங்களுக்கு மேலாகப் பணிபுரிந்துள்ளார்.

கிரேஸ்

ஆசிர்வாதம்

கிரேஸ் ஆசிர்வாதம் அம்மையார் அவர்கள் இரசாயன ஆயூ+த தடுப்புக்கான அமைப்பின் (ழுPஊறு) பிரதிப் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்டார். கிரேஸ் ஆசீர்வாதம் அம்மையார் அவர்களுக்கு இலங்கை இராஜதந்திர சேவையில் ஒரு நீண்ட சேவைப் பதிவோடு கொழும்பில் பல பதவிகளை வகித்துள்ளதுடன் மிக அண்மையில் தென் ஆசிய மற்றும் ளுயூசுஊ அமைப்பின் பணிப்பாளர் நாயகமாகப் பணிபுரிந்துள்ளதுடன் தற்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பொருளாதார அலுவல்களுக்கான பணிப்பாளர் நாயகமாக பணிபுரிகின்றார். அவர் பாகிஸ்தான் மற்றும் ஜேர்மனி நாடுகளில் பணியற்றியதுடன் நேபாளம் மற்றும் நெதர்லாந்திற்கான இலங்கை தூதுவராகவூ+ம் கடமையாற்றியூ+ள்ளார்.

கலாநிதி

தீபிகா உடகம

கலாநிதி தீபிகா உடகம அவர்கள் மனித உரிமைகள் துறையில் தொழில்நுட்ப ரீதியிலான ஒத்துழைப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தன்னார்வ நிதியத்தின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினராகவூம் (2008-2013)இ தவிசாளராகவூம் (2013) பணியாற்றியூள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு ஆணைக்குழுவின் (தற்போது மனித உரிமைகள் ஆலோசனைக் குழு) இலங்கையின் மாற்று உறுப்பினராகவூம் (1998-2001)இ உலக மயமாதலும் மனித உரிமைகள் மீதான அதன் தாக்கமும் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் உலக ஆணைக்குழுவின் இணை விசேட அறிக்கையாளராகவூம் (1999-2001) அவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது பேராதனைப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவராகவூம்இ மனித உரிமைக்கான தென் ஆசியர்கள் (ளுயூHசு) அமைப்பின் பணியக உறுப்பினராகவூம் உள்ளார்.

அருணி

விஜேவர்தன

அருணி விஜேவர்தன அம்மையார் அவர்கள் 1988 தொடக்கம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஒரு இராஜதந்திரியாகப் பணிபுரிந்துள்ளார். அவர் ஒஸ்ட்ரியாஇ மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராகவூம்இ ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதியாகவூம் இருந்துள்ளார். 2013 இல்இ வியன்னாவை மையமாகக் கொண்ட சர்வதேச அணுச்சக்தி முகவர் நிலையத்தின் ஆளுநர் சபைச் செயலாளராகவூம் அவர் நியமிக்கப்பட்டார். மேலும் அவர் செறிவான அணுப் பரிசோதனை ஒப்பந்த அமைப்பின் நிரந்தரப் பிரதிநிதியாகவூம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் சரிபார்ப்பு அரச நிபுணர்கள் குழுவின் முன்னாள் உறுப்பினராகவூம் இருந்துள்ளார்.

யூ. டு. யூ.

அஸீஸ்

யூ. டு. யூ. அஸீஸ் அவர்கள் 1992 தொடக்கம் வெளிவிவகார அமைச்சின் ஒரு இராஜதந்திரியாக பணிபுரிந்துள்ளார். திரு. அஸீஸ் அவர்கள் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மற்றும் வியன்னாவில் உள்ள ஏனைய சர்வதேச அமைப்புக்களுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக பணிபுரிந்து வருகின்றார். பலதரப்பு இராஜதந்திரக் குழு மற்றும் பரந்தளவிலான அணுப் பரிசோதனை தடுப்பு ஒப்பந்த அமைப்பைத் தயார்படுத்தும் அலுவலகத்தின் செயற்குழு யூஇன் தவிசாளராகவூம்இ ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் இடைக்கால தலைவராகவூம் பணிபுரிகின்றார். 2014 இல்இ சர்வதேச அணுச்சக்தி அதிகார சபையின் பொதுப் பேரவையில் அதன் 58 ஆவது பொதுப் பேரவையின் தலைவராக திரு. அஸீஸ் அவர்கள் தெரிவூ செய்யப்பட்டதுடன் அவர் குழு 77 (பு 77) இன் வியன்னாப் பிரிவூ தவிசாளராகவூம் பணியாற்றுகின்றார்.